திருநெல்வேலி : திமுக அரசை கண்டித்து அதிமுக திண்ணை பிரசாரம்

Tirunelveli-AIADMK-campaign-in-the-streets-condemning-the-DMK-government

திருநெல்வேலி ஜங்ஷன், சிந்து பூந்துறை பகுதியில் புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பாக நேற்று திமுக அரசை கண்டித்து திண்ணை பிரசாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசமி தமிழக மக்களுக்கு தந்த திட்டங்கள், சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கி, திண்ணை பிரச்சாரத்தை அதிமுக மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் தச்சை. கணேசராஜா தொடங்கி வைத்தார். மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட நெல்லை சந்திப்பு ,மதுரை ரோடு பகுதியில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.ஜே.சி ஜெரால்டு, தச்சை மேற்கு பகுதி செயலாளர் சிந்து. முருகன் மற்றும் மாநகர் மாவட்ட அம்மா பேரவை அவைத்தலைவர் செல்வசேகர் ஏற்பாட்டில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கழகஅமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநில எம்ஜிஆர் மன்றம் துணைச் செயலாளர் வீரபெருமாள், மகபூப் ஜான் இலக்கிய அணி ஸ்டார் ஐயப்பன் , நல்லபெருமாள் நைனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

READ MORE ABOUT :