
இந்தியா கூட்டணியை வலுப்படுத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தனை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழகத்தில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் கட்சி சார்பில் 2 லட்சம் உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இந்த பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீனுக்கு முதலமைச்சர் தகைசார் விருது வழங்கியதற்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். எங்களது நோக்கம் அதிக தொகுதிகளை பெறுவதோ, அதிகாரத்தில் பங்கு கேட்பதோ இல்லை. கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதே எங்களின் ஒரே நோக்கம். நடிகர் விஜய் மதவாத சக்திகளுக்கு இரையாகாமல் இருந்தால் நல்லது.
பா.ம.க.வை இரண்டு கட்சிகளாக பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வை பல துண்டுகளாக உடைத்தது போல, பா.ம.கவை உடைக்கிறது. . அ.தி.மு.க.வின் "உரிமையாளர்" பா.ஜ.க.வா அல்லது எடப்பாடி பழனிசாமியா எனத் தெரியவில்லை . அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் யார்? என்பதை டெல்லியில் உள்ள பாராளுமன்றக் குழுதான் முடிவு செய்யும் என ஹெச். ராஜா கூறுகிறார். ஜெயலலிதாவை அவமதித்துப் பேசிய பா.ஜ.க.வினர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை . காங்கிரஸ் கட்சி எப்போதும் இணைப்பார்களே தவிர, பிளவுபடுத்துபவர்கள் அல்ல. நெல்லை காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் இறந்த வழக்கில் இன்னும் எங்களுக்கு வருத்தம் உள்ளது. மூத்த அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.