பசுமை பாரதம் கட்சி 234 தொகுதிகளில் தனித்து போட்டி...

pasumai-bharatham-party-meetting-in-coortalam

பசுமை பாரத மக்கள் கட்சியின் நிறுவனர் ஆறுமுகராஜ் தலைமையில் குற்றாலத்தில் அந்த கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. அப்போது, பசுமை மக்கள் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமை பாரத கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பசுமை பாரத மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் கூறுகையில், " அனைவருக்குமான சமூகநீதி என்ற அடிப்படையில் பசுமையான தமிழகம் , பசுமையான பாரதம் என்கின்ற.உயரிய நோக்கத்தோடு பசுமை பாரதம் கட்சி செயல்பட்டு வருகிறது. தனிமனித முன்னேற்றம். குடும்பத்தின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்கிற அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

தற்போது தமிழகத்திலுள்ள, அனைத்து இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களை காப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான பொறுப்பு. இதை , வலியுறுத்தி பசுமை பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். '

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில தலைவர் சிவகுமார். பொருளாளர் கோபி கண்ணன். மாநில இணை பொது செயலாளர் ஏழுமலை . மாநில அமைப்பு செயலாளர் ஆறுமுகம் ,திருநெல்வேலி கந்தன், தூத்துக்குடி தமிழன் பாலா . வெளிநாடு உறவு சுந்தரம், மதுரை ஜெகதீசன் , திருச்சி மாணிக்க விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.