பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநில மாநாடு ஆகஸ்ட் 17ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது. சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலை வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டியை வலுப்படுத்த கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன், மூத்த தலைவர்கள் தமிழிசை, ஹெச். ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ போன்றவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தென்மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதனால், பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநாடு ஆகஸ்ட் 17ம் தேதி திருநெல்வேலியில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தொடர்ந்து , மதுரையிவ் செப்டம்பர் 13, அக்டோபர் 26 கோவை நவம்பர் 23 சேலம் டிசம்பர் 21 தஞ்சாவூர் , ஜனவரி 4 திருவண்ணாமலை, ஜனவரி 24 திருவள்ளுர் போன்ற இடங்களில் பாஜக மாநாடு நடைபெறவுள்ளது.









.jpg)
.jpg)