கன்னியாகுமரி அருகேயுள்ள தக்கலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லாத நிலையில், அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தாய் வீட்டுக்கு அவர் திரும்பியுள்ளார். அப்போது, தோழிகள் கூறியதால் மேக்காமண்டபம் பாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஒரு சபைக்கு பெற்றோருடன் சென்றுள்ளார். சபை போதகர் ரெஜிமோன் தான் பெண்ணுடன் தனிமையில் ஜெபித்தால், நோய் குணமாகி விடுமென்று கூறியுள்ளார்.
பெற்றோர் போதகருடன் தனி அறைக்கு மகளை ஜெபிக்க அனுப்பியுள்ளனர். அங்கு, பெண்ணின் அழகில் போதகர் ஜெபத்தை மறந்தார். அந்த இளம் பெண்ணை கட்டிபிடித்து பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதனால், பயந்துபோன, அந்த பெண் போகதரிடன் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.பின்னர், பெற்றோரிடத்தில் நடந்த விஷயத்தை கூறினார். தொடர்ந்து,தக்கலை போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, போதகர் ரெஜிமோன் கைது செய்யப்பட்டார். வேறு பல பெண்களிடத்தில் இதே போல அவர் நடந்துள்ளாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது









.jpg)
