வருமான வரித்துறை சோதனை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பி.ஆர்.ஓ போல பேசி லஞ்சம் கேட்டவர், பில்டிங் கான்ட்ராக்டரின் சாமர்த்தியத்தால் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.
திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் குருநாதன் (29). இவர், நெல்லை மாவட்டம் முழுவதும் கட்டட ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, குருநாதனின் செல்போனுக்கு ஒருவர் பேசிவயுள்ளார். அப்போது, தன்னை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பி.ஆர்.ஓ. அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும், "உங்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சோதனையை நான் தடுத்து நிறுத்துகிறேன். அதற்கு எனக்கு ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.
சந்தேகமடைந்த குருநாதன், உடனடியாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் அளித்தார். தொடர்ந்து, காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, குருநாதன் அந்த மர்ம நபரைத் தொடர்புகொண்டு, பணத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். குருநாதனைப் பிடிப்பதற்கு சிவந்திப்பட்டி காவல்துறையினர் ரகசியத் திட்டத்தை வகுத்து காத்திருந்தனர். நேற்றுமுன்தினம் (ஜூலை 7) பணத்தைப் வாங்க குருநாதன் சொன்ன இடத்துக்கு அந்த நபர் வந்தார்.அங்கு மறைந்திருந்த சிவந்திப்பட்டி காவல்துறையினர், அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழைய பேட்டை, வாணியர் தெருவைச் சேர்ந்த இசக்கி ராஜா (31) என்பது தெரியவந்தது. போலீசார் இசக்கி ராஜாவை கைது செய்து, வேறு யாரிடமாவது பணமோசடியில் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









.jpg)
.jpg)