நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பொருளாதார துறைக்கான புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது .
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறைக்கான புதிய கட்டிட திறப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து சுமார் 50 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடங்களை கட்டி கொடுத்துள்ளார். அதோடு, மேஜை , சேர் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்தைமகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்து மாணவர்களுடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார். விழாவில் பல்கலைகழக துணைவேந்தர் சந்திரசேகர், பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ், பல்கலைக்கழக தேர்வாணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.










