புகைப்பட கலைஞர்களுக்கு ஆழ்வார்குறிச்சியில் பயிற்சி முகாம் மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது

a-training-camp-for-tirunelveli-photographers-at-alwar-kurichi-medical-check-up-also-held

ஆழ்வார்குறிச்சியில் புகைப்படக் கலைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு மற்றும் இலவச கண் சிகிச்சை, இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட ஒளிப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் நெல்லை ஒளிப்பதிவாளர்கள் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி திருமண மண்டபத்தில் மாவட்ட புகைப்பட கலைஞர்களுக்கு விஷுவல் கம்யூனிகேஷன் பயிலும் கல்லூரி மாணவ - மாணவியர்களும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் புகைப்பட சம்பந்தமான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் கண் சிகிச்சை முகாம் இருதய பரிசோதனை முகாம் புகைப்படக் கலைஞர்களுக்காக நடத்தப்பட்டது.

முகாமில் கன்னியாகுமாரி, தென்காசி ,திருநெல்வேலி ,தேனி, மதுரை, மயிலாடுதுறை, கடலூர் என பல மாவட்டங்களை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் அம்பை தீயணைப்பு துறை அதிகாரி பலவேசம் தலைமையிலான குழுவினர் எதிர்பாராத விபத்து ஏற்படும் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வீடுகளில் ஏற்படும் மின் கசிவு விபத்து, சிலிண்டர் எரிவாயுவால் விபத்து ஏற்படும் நேரங்களில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை நிகழ்த்தி காட்டினர் இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட ஒளிப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் நெல்லை ஒளிப்பதிவாளர்கள் நண்பர்கள் அறக்கட்டளை குழுவினர் செய்திருந்தனர்.