நடிகர் விஜய்யின் தாயார் பற்றி திருநெல்வேலியில் சபாநாயகர் சொன்ன தகவல்...!

speaker-said-what-about-actor-vijay-s-mother

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கப்பட்ட "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

* இந்த முகாம் தமிழகம் முழுவதும் 10,000 இடங்களில் நடைபெற உள்ளது.
* திருநெல்வேலி மாவட்டத்தில் 255 இடங்களில் இந்த முகாம் நடத்தப்படும்.
* அக்டோபர் 7 வரை நடைபெறும் இத்திட்டத்தில், செவ்வாய் முதல் வெள்ளி வரை மனுக்கள் பெறப்படும்.
* பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
* இந்த பணிக்காக நெல்லை மாவட்டத்தில் 1295 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
* மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு முகாமிலும் 4 மையங்கள் செயல்படும்.

பின்னர், சபாநாயகர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில் கூறியதாவது, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன் போல ஒரு ஆளுநர் இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது.தமிழக ஆளுநர் தமிழக சுகாதாரத் துறையைப் பாராட்டியது உண்மை .நடிகர் விஜயின் தாயார் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர் . இதனால், சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்க விஜயை பாஜக களமிறக்க நினைக்கிறது. விஜயின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து இதுவரை சரியான தகவல் இல்லை. ஆனால், இந்த சோதனை நடந்தபோது, புஸ்ஸி ஆனந்த், அமித்ஷாவுடன் பேசி பிரச்னையை சரி செய்துள்ளார். தொடர்ந்து, வருமான வரி சோதனை நடத்திய அதிகாரி அருண்ராஜுக்கு தவெகவில் பதவியும், புஸ்ஸி ஆனந்திற்குப் பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் அப்போதைய அரசு வழக்கு பதிவு செய்யவே தயங்கியது . ஆனால்,அஜித்குமார் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

READ MORE ABOUT :