இணையவழி மோசடி... நெல்லையில் களமிறங்கிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

online-fraud-economic-crimes-police-awarness-in-nellai

தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆன்லைன் மூலம் மக்களை ஏமாற்றும் போக்கு அதிகாரித்து வருகிறது. இதை தடுக்க, சைபர்கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆன்லைன் வழியாக செய்யப்படும் பண மோசடி மற்றும் நிதி நிறுவனங்களில் செய்யப்படும் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது இதனை பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவி, தலைமை காவலர் வள்ளி உள்ளிட்டோர் சாலைகளில் பொதுமக்களை சந்தித்து வழங்கினர். மேலும், பொதுமக்கள் இணைய வழி மோசடிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உடனடியாக, போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் மக்களுக்கு பொருளாதார குற்றப்பிர போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

READ MORE ABOUT :