கவின் ஆணவக் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்- தமிழர் விடுதலைக்களம் கோரிக்கை

tamilar-liberation-front-demands-transfer-of-kavin-s-honor-killing-case-to-cbi

நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணைவக்கொலையை கண்டித்து திருநெல்வேலியில் தமிழர் விடுதலைக்களம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்தவரின் பெற்றோர் தமிழ்நாடு காவல்துறையில் பணி புரிவதால் , விசாரணை நேர்மையான முறையில் நடைபெறாது . எனவே, கவினின் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென கோஷம் எழுப்பப்பட்டது. கொலை செய்தவரின் பெற்றோர் தமிழ்நாடு காவல்துறையில் பணி புரிவதால் , விசாரணை நேர்மையான முறையில் நடைபெறாது . 6 மாதங்களுக்கு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்றம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.