பெண்களுக்கு விளைவிக்கப்படும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தின் கீழ் புதிய திருத்தமான பிரிவு 7 (சி) அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பாதுபாப்பு அமலில் உள்ள காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை பின் தொடர்ந்து அச்சுறுத்தினாலோ அல்லது தொல்லை கொடுத்தாலோ இணைய வழியில் தொல்லை கொடுத்தாலோ, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
இத்தகையை குற்றச் செயலில் ஈடுபட்ட சுத்தமல்லி காவல் நிலையத்துக்குட்பட்ட 3 பேர் மீதும் சீதபகற்நல்லூர் மற்றும் சிவந்திப்பட்டி காவல் நிலையத்துக்குட்பட்ட இருவர் மீதும் இந்த சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சட்டம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான சூழலையும் உருவாக்குகிறது. இந்த தகவலை நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.










