பள்ளி டிரைவர் செய்த அராஜாகம்... பாலியல் புகார் சொன்னால் டி.சி தரும் அம்பை பள்ளி

sexual-complaint-against-school-driver-in-ambasamudram

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் செயலாளராக வழக்கறிஞர் கந்தசாமி என்பவர் உள்ளார். இவரின் கார் ஓட்டுநரான மணிக்குமார் என்பவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பழகியுள்ளார். பின்னர், மாணவியின் ஏழ்மை நிலை அறிந்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். வீட்டில் மாணவியை கட்டாய பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை உடனடியாக மாணவி தனது தாயிடமும், பள்ளி நிர்வாகத்திடம் நேரடியாக மாணவி முறையிட்டுள்ளார். ஆனால், பள்ளியின் செயலாளர் வழக்கறிஞருமான கந்தசாமி தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் , இந்த விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என்று கூறி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு, மாணவிக்கு டிசியை கொடுத்து பள்ளியை விட்டே அனுப்பியுள்ளனர்.

எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இந்த விவகாரம் குறித்து உறவினர்களிடத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, பல்வேறு சமூகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் மணிக்குமார் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் செயலாளர் , தலைமை ஆசிரியர் அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் நெடுஞ்சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பள்ளிச் செயலாளர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி அலுவலகப் பணியாளர் ஆகியோரும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

READ MORE ABOUT :