சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் டாடா பவர் சோலார் இணைந்து தாமிரபரணி நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அல்வா சிட்டி மாரத்தான் போட்டியை நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 6.000 வேறு வரை கலந்து கொண்டனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் டாட்டா பவர் சோலார் இணைந்து தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்காக அல்வா சிட்டி என்ற பெயரில் மாபெரும் மாரத்தன் போட்டியை இன்று நடத்தினர். இந்த மாரத்தான் போட்டியில் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 6, 000 பேர் வரை கலந்து கொண்டனர். தன்னார்வலர்கள் 500க்கும் மேற்பட்டோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும். பாலிதீன் தொடங்கி பல்வேறு கழிவுகளை நதியில் கொட்டுவதை தடுக்க வேண்டும் நம் தாமிரபரணி என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டியை சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் டாட்டா பவர் சோலார் நிறுவனம் இணைந்து நடத்தியது. முதலில் ஆண்கள் பிரிவிற்கு தனியாகவும், பெண்கள் பிரிவிற்கு தனியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசாக சைக்கிள்கள் வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் சான்றிதழ் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
போட்டிகளை டாட்டா பவர் சோலார் சி. இ . ஓ பாலாஜி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லகுமார் மாரத்தான் தொடங்கி வைத்தனர். முன்னாள் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், பாஸ்கர், முத்துராமன் குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.










