திருநெல்வேலியில் தீரன் சின்னமலை உருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

Edappadi-Palasiswamy-pays-tribute-to-the-Theeran-Chinnamalai-in-Tirunelveli

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினால். பின்னர், இரவு ராதாபுரம் தொகுதி பணகுடியில் மக்களிடத்தில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து இரவு நெல்லை வந்தார். அப்போது நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதியான இன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு தினத்தை ஒட்டி அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், ராஜலக்ஷ்மி, ஆர் பி உதயகுமார் தச்சை கணேசராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்