தமிழகத்தில் மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் 50வது ஷோரூம் நெல்லையில் திறப்பு

minister-white-new-showroom-in-nellai

சென்னையை தலைமையிடமாக கொண்ட மினிஸ்டர் ஒயிட் நிறுவனம் தமிழகத்தில் தனது 50வது கிளையை நெல்லை கீழ ரத விதியில் திறந்துள்ளது.

தமிழகர்களின் பாராம்பரிய வேட்டி, சட்டைகளை தயாரித்து வழங்கும் மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்துக்கு திருநெல்வேலியில் ஏற்கனவே இரு கிளைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில், 3வது கிளையை கீழரத வீதியில் இன்று ( ஆகஸ்ட் 3) திறந்துள்ளது. புதிய கிளையை க்ளோத்திங் மற்றும் மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் உரிமையாளர் போத்திராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் போத்திராஜ் கூறுகையில், திருநெல்வேலியுடனான எங்கள் பயணம் இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. நெல்லை மக்கள் பாராம்பரியமிக்க ஆடைகள் மீது வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் எங்களை சிந்திக்க தூண்டியது. நெல்லை மக்கள் தங்கள் அடையாளமாகவே வேட்டியை கருதுகின்றனர். எனவே, ஆடி பெருக்கு தினத்தில் திருநெல்வேலியில் எங்களது 50வது கிளையை திறப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களின் Flexiwaist ரக வேட்டிகள் திருநெல்வேலி மக்களை வெகுவாக கவரும் என்றும் நம்புகிறோம் ' என்றார்.

ஓட்டோ க்ளோத்திங் நிறுவனத்தின் தலைமை வணிக துறை பிரிவு தலைவர் சுரேஷ் ராமசுப்ரமணியம் கூறுகையில், 'திருநெல்வேலியில் ஆடி மாதத்தில் ஏராளமான கோவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த தருணத்தில் பாரம்பரிய நமது வேட்டிகள் மக்களுக்கு பரவலாக கிடைக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் புதிய கிளையை தொடங்கியுள்ளோம். எங்களின் Flexiwaist ரக வேட்டிகளை எளிதாக அணியும் விதத்தில் நேர்த்தியாக உருவாக்கியுள்ளோம் 'என்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு மினிஸ்டர் ஒயிட் ரக பிராண்டு வேட்டி, சட்டைகள் சந்தையில் அறிமுகமாயின. இந்த நிறுவனத்துக்கு சேலம், ஸ்ரீபெரும்புத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நகரங்களில் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். தென்னிந்தியாவிலுள்ள 50 ஷோரூம்களில் 32 தமிழகத்தில் உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளாவில் மற்ற ஷோரூம்கள் அமைந்துள்ளன. வரும் 2026- 27ம் நிதியாண்டுக்குள் 100 ஷோரூம்களை திறக்க மினிஸ்டர் ஒயிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வட இந்தியா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விரைவில் ஷோரூம்கள் திறக்கப்படவுள்ளன.

READ MORE ABOUT :