அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பிலான தனது எழுச்சிப் பயணத்தை இன்று (ஆகஸ்ட் 4 ) நெல்லையில் தொடங்குகிறார். இன்று, நெல்லை, தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் மக்களிடத்தில் பேசுகிறார்.
நேற்று முன்தினம் இரவு ராதாபுரம் தொகுதியில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை நேரத்தில், நெல்லை சந்திப்பு ஆர்.ஆர். இன் ஓட்டலில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். இதைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு தாழையூத்து மெயின் ரோட்டில் அமைந்துள்ள அமோகா பேலசில், அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.மாலை 4.30 மணிக்கு நெல்லை டவுன் வாகையடி திடலில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட்டிலும், இரவு 8 மணிக்கு நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காட்டிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். களக்காடு பிரசாரத்திற்குப் பிறகு, அவர் குற்றாலத்திற்குச் சென்று இரவில் அங்கு தங்குகிறார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு குற்றாலத்தில் இருந்து புறப்படும் எடப்பாடி பழனிசாமி, மாலை 5 மணிக்கு தென்காசி எம்.ஜி.ஆர். திடலில் தனது எழுச்சிப் பயண உரையை நிகழ்த்துகிறார். மாலை 6.30 மணிக்கு அம்பாசமுத்திரம் பூக்கடை பஜாரிலும், இரவு 8 மணிக்கு ஆலங்குளம் காமராஜர் திடலிலும் பேசுகிறார். பின்னர் மீண்டும் குற்றாலத்தில் தங்குகிறார்.
நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு குற்றாலத்தில் இருந்து புறப்படும் எடப்பாடி பழனிசாமி, மாலை 5 மணிக்கு கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே எ பேசுகிறார். மாலை 6.30 மணிக்கு வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட புளியங்குடியிலும் பேசுகிறார். இரவு 8 மணிக்கு சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை பயணிகள் விடுதி அருகே பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். சங்கரன்கோவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, அவர் ராஜபாளையம் புறப்பட்டுச் செல்கிறார்.










.jpg)