கவின் ஆணவகொலை : இடது சாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Kavin-s-assassination-Left-wing-parties-protest


கவின் படுகொலையை கண்டித்தும் சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற கோரி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் கே .ஜி பாஸ்கரன் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சேதுராமலிங்கம், சிபிஐ எம் எல் கட்சி மாநில நிலை குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் நிறைவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர். கிருஷ்ணன் ,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், எம்.சுடலைராஜ், பீர் முகம்மது ஷா, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ் கே .செந்தில் ,கந்தசாமி காமராஜ்,கு.பழனி,துரை நாராயணன்,பி.எம்.முருகன், எஸ்.வி.பாலசுப்ரமணியன்,, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்துகிருஷ்ணன், பாலன்,சிபிஐஎம்எல்.கருப்பசாமி மாரிமுத்து, சிவகாமி நாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

READ MORE ABOUT :