கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ரூ. 400 கோடி ரூபாய் மதிப்பிலான நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் நடைபெற்ற வின்பாஸ்ட் கார் தயாரிப்பு நிறுவனத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி. நிறுவனத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதே வேளையில், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், குத்துவிளக்கேற்றினார்.
2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுடன் நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனம் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதனடிப்படையில், 400 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இது, தென் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 1000 பேர் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர். மேலும், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிரிட்டானியா இண்டஸ்டிரீஸ் லிமிடெட், ஏடிசி டயர்ஸ் பிரைவேட் லிமிடெட்., நோவா கார்பன் இந்தியா பிரைவேட் லிமிடெட்., ஆகிய நிறுவனங்களின் விரிவாக்க பணியினையும் முதல்வர் தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில், நிறுவன தலைவர் வி.எஸ்.நடராஜன் ,சுந்தரி நடராஜன் திட்ட ஆலோசகர் மணிவேல், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பிரபாகரன், திமுக ஒன்றிய செயலாளர் அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.









.jpg)
