ராணி அண்ணா கல்லூரியில் புதிய நூல் வெளியீடு

new-book-published-at-rani-anna-college

திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 40 கட்டுரைகள் தொகுத்து "பன்முக நோக்கில் தமிழ் இலக்கியங்கள் " என்ற பெயரில் புதிய நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்துக்கு ஒருங்கிணைப்பாளர். முனைவர். இரா. உமாதேவி ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரி முதல்வர் முனைவர்.தீபா தலைமை தாங்கினார்.

கவிஞர் சிவன், பாரதி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்தும் கட்டுரைகள் வந்துள்ளன. பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,கட்டுரைகளை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

READ MORE ABOUT :