நெல்லை மாவட்டம் முண்டந்துறை வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வனவிலங்குகள் மற்றும் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மரக்கன்றுகள் நடுதல், மரம் நடுதல் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முண்டந்துறை, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், களக்காடு பகுதிகளில் மாணவர்கள் சைக்கிள் பேரணி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி போன்றவை வனத்துறை சார்பாக நடத்தப்பட்டது. பேரணி மற்றும் போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வனத்துறை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.












