பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர்-கந்திமதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார்.
நேற்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற “உரிமை மீட்க, தலைமுறை காக்க” என்ற மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இன்று காலை நெல்லை நகருக்கு வந்து, நெல்லையப்பர் சுவாமி மற்றும் கந்திமதி அம்மனை தரிசனம் செய்தார்.

அப்போது கோவில் அர்ச்சகர்கள் மரபுப்படி அவருக்கு தீபாராதனை செய்து, பூரண கும்பமரியாதையுடன் ஆசீர்வாதம் அளித்தனர். அன்புமணி ராமதாஸ் கோவிலின் உள் பிரகாரங்களில் சாந்தமாக வழிபாடு செய்து, சுவாமிக்கு விசேஷ அர்ச்சனை செய்தார். பின்னர், கோவிலை சுற்றி பார்த்து அவர் பிரமித்தார். பிறகு, சிறிது நேரம் கோவிலில் அமைதியாக அமர்ந்திருந்தார்

பின்னர், கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது ,பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்கள் உடன் இருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.











