பாளையங்கோட்டை அருகே : ஓட்டலுக்கு தீ வைப்பு ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்

near-palayamkottai-hotel-set-on-fire-goods-worth-rs-10-lakh-damaged

பாளையங்கோட்டையை அடுத்த பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 81). இவருக்கு சொந்தமான இடத்தில் ஓட்டலுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். பத்தமடை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த ஒரு மாத காலமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரம் முடிந்தவுடன் பாலமுருகன் கடையை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டார். நேற்று காலையில் ஓட்டலுக்கு வந்து பார்த்தபோது ஓட்டல் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டலுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது மின்கசிவு போன்ற காரணத்தினால் ஹோட்டல் எரிந்து நாசமாகியதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தபோது நேற்று முன்தினம் நள்ளிரவில் ஓட்டலுக்கு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து ஆட்டோவில் வந்த மர்ம கும்ப கும்பல் யார்? எதற்காக தீ வைத்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதல் கட்ட விசாரணையில் சுந்தர்ராஜனுக்கு சொந்தமான அந்த இடம் தொடர்பாக அவருக்கும், அவரது உறவினர்களுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுந்தர்ராஜனின் உறவினர்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மர்ம கும்ப கும்பல் தீ வைத்ததால் ஓட்டலில் இருந்த பொருடகள் அனைத்தும் எரிந்து நாசமாகியது. இதன் சேதமதிப்பு ரூ. 10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

READ MORE ABOUT :