மரக்கன்று வளர்த்தால்தான், கட்டடம் கட்ட அனுமதி- நெல்லை மேயர் அதிரடி

new-construction-rules-for-nellai-corporation

மாநகர பகுதியில் கட்டப்படும் புதிய கட்டிடம்,புதிய வணிக வளாகம் போன்றவைகளுக்கு கட்ட அனுமதி பெற வேண்டும் என்றால் அனுமதி பெறும் காலியிடத்தில் மரக்கன்று நடவு செய்து வளர்த்து, அந்த புகைப்படத்துடன் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மைய கூட்டரங்கில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் துணை மேயர் ராஜூ, ஆணையாளர் மோனிகா ராணா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . கூட்டம் தொடங்கியதும் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டையை சேர்ந்த மறைந்த தமிழ்அறிஞர் தொ.பரமசிவன் நினைவாக பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் சாலையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்டபொம்மன் சிலை ரவுண்டனா முதல் மரியாகேண்டின் வரையுள்ள 1 கிலோமீட்டர் சாலைக்கு தமிழ் அறிஞர் தொ.பரமசிவன் பெயர் சூட்ட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நெல்லை மாநகராட்சி பகுதியில் ஏற்படும் காற்று மாசுவை குறைக்க மாநகராட்சி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகர பகுதியில் கட்டப்படும் புதிய கட்டடம்,புதிய வணிக வளாகம் போன்றவைகளுக்கு அனுமதி பெற கட்டடம் கட்டுப்படவுள்ள இடத்தின் அருபே காலியிடத்தில் மரக்கன்று நடவு செய்து , அந்த புகைப்படத்துடன் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்தார். இந்த சட்டதிருத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

READ MORE ABOUT :