நெல்லை அரசு மருத்துவமனையில் தப்பிய கைதி விசம் குடித்த நிலையில் மீட்பு

prisoner-who-escaped-from-nellai-government-hospital-rescued-after-consuming-poison

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணை கைதி விசம் அருந்திய நிலையில் பாளையங்கோட்டையில் நேற்று போலீசாரால் மீட்கப்பட்டார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திலகராஜ் பாயிண்ட் அருகே கடந்த 4 ம் தேதி கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த முத்துச்செல்வன் என்பவர் நடுரோட்டில் ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டடார். அதோடு, போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் பொதுமக்கள் துணையுடன் முத்துச்செல்வத்தை மேற்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் 8ம் தேதி இரவு பாத்ரூம் செல்வதாக கூறி சென்ற முத்துச் செல்வன் தப்பியோடி விட்டார. முத்துசெல்வனை திருநெல்வேலி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பாளையங்கோட்டையில் விசம் அருந்திய நிலையில் முத்துச்செல்வன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.