கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து, ஆனால் அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கலாம்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினரும், நடிகருமான தாடி பாலாஜி நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நெல்லையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தலைவர் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். நான் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். 'இது தலைவருக்கு தெரியாமல் நடந்த சம்பவம். இதில் அவர் என்ன செய்ய முடியும்?' என்று அவர்களே கூறினார்கள்" . தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் காணோளி காட்சி மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். அவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் அவர் அவர்களை நேரில் சந்திப்பார்.

கரூரில் குறுகலான இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது தலைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இடத்தின் தன்மை , மக்கள் கூட்டம் குறித்து தலைவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். இது ஒரு விபத்தாக இருந்தாலும், இதன் பின்னணியில் தலைவர் மீது பழி சுமத்தும் நோக்கில் ஏதேனும் சதி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. =காவல்துறையின் பாதுகாப்பும் அங்கு போதுமானதாக இல்லை.
தலைவர் விஜய் இந்த சம்பவம் குறித்து பேசினால், அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். விரைவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து, கரூர் சம்பவம் தொடர்பான பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். தலைமைக்கும், தலைவருக்கும் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்களே பதவிகளுக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.










