
ராதாபுரம் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திசையன்விளை அருகேயுள்ள அப்பு விளையில் நடைபெற்றது.
விழாவுக்கு தலைவர் பிரான்சிஸ் துரை தலைமை தாங்கினார் . செயலாளர் நம்பித்துரை அனைவரையும் வரவேற்றார் . முத்துக்குமார் , கித்தேரியாள் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பையா , சுப்பிரமணியன் , மதி ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர் .சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி .எஸ். ஆர். ஜெகதீஷ் கலந்து கொண்டு பரிசு வழங்கி ஆசிரியர்களை கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் அப்புவிளை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா மகேஸ்வரன் ,மாவட்ட செயலாளர் துரை , மாவட்ட தலைவர் சுரேஷ், முத்துக்குமார், சாந்தகுமார் சந்திரன் , ஆறுமுக பாண்டி , வேலப்பன் , சேவியர், நாங்குநேரி வட்டார செயலாளர் ஜார்ஜ், வைகுண்ட ராஜா, சிஸ்டர் அல்போன்சா , அபி ,தங்க சீலன் ஆகியோர் வாழ்த்து பேசினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பாக சண்முகசுந்தரம், ஜான் ரோஸ் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் சார்பாக சுமதி ஆகியோர் ஏற்புரை வழங்கினர். நிகழ்ச்சிகளை மாவட்ட பொருளாளர் அருள் தாசன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் ஜோசப் பிரின்ஸ்டன் நன்றி கூறினார்.











