தச்சநல்லூர் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் யார்?- களத்தில் துணை ஆணையர்

who-threw-petrol-bombs-at-thachanallur-police-station

திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் சோதனைச் சாவடி மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய திருநெல்வேலி மாநகர கிழக்கு பகுதி துணை ஆணையர் பிரசன்ன குமார்.' தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் விவரம்:

1. *கிருஷ்ணபெருமாள் என்கிற ஆப்பிள் (19),* த/பெ பெருமாள், தண்ணீர் தொட்டி தெரு, இந்திரா நகர், ராஜவல்லிபுரம்.
2. *அஜித்குமார் (30),* த/பெ கணேசன், இந்திரா நகர், ராஜவல்லிபுரம்.
3. *பெருமாள் (27),* த/பெ காவு என்கிற தளவாய், பிள்ளையார் கோவில் தெரு, இந்திரா நகர், ராஜவல்லிபுரம்.
4. *சரண் (19),* த/பெ நடராஜன், தண்ணீர் தொட்டி தெரு, இந்திரா நகர், ராஜவல்லிபுரம்.
5. *அருண் (22),* வல்லவன் கோட்டை.

மேற்கண்ட ஐந்து பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என துணை ஆணையாளர் பிரசன்ன குமார் உறுதியளித்துள்ளார்.