பாளையங்கோட்டையில் பரோட்டா போட்ட பாப்புலர் முத்தையா: அதிமுகவுக்கு வாக்களிக்க பிரசாரம்

Palayamkottai-Campaign-to-vote-for-AIADMK

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள், செய்த சாதனைகளை மக்கள் அறியும் வகையில் நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், திண்ணை பிரச்சாரமும் மேற்கொண்டனர்.

அந்த பகுதியில் இருந்து பரோட்டோ கடைக்கு அதிமுகவினர் பிரசாரத்துக்காக சென்றனர். அப்போது, அதிமுக மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளரான பாப்புலர் முத்தையா, புரோட்டா கடை ஒன்றில் பரோட்டா போட்டுக்கொண்டே கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடத் துண்டு பிரசுரனை வழங்கினார். அப்போது, அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், திமுக ஆட்சியின் அவலங்களையும் எடுத்து கூறி வரும் 2026 தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

READ MORE ABOUT :