திசையன்விளை: ராதாபுரம் ஒன்றிய இந்து மகா சபை செயற்குழு கூட்டம்

tisaiyanvilai-radhapuram-union-hindu-mahasabha-executive-committee-meeting

அகில பாரத இந்து மகா சபா ராதாபுரம் ஒன்றிய செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் திசையன்விளை தம்புலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் காரப்பொரி ஜெகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல தலைவர் இசக்கி ராஜா, மாவட்டத் தலைவர் ரத்தினகுமார் , ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவர் ஜோதி சங்கர் , இளைஞர் அணி செயலாளர் அனீஸ், களக்காடு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் , இளைஞர் அணி தலைவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நகரத் தலைவர் சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆதி நாராயணன் நகரப் பொதுச் செயலாளர் இளைய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்கள் இந்து மகா சபாவின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் குஞ்சன்விளையில் பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்,குருகாபுரத்தில் மயானம் செல்லும் பாதையை சீரமைத்து தரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

READ MORE ABOUT :