உலக மனநல தினம் கடந்த 10ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதை, முன்னிட்டு திருநநல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் பேராபத்து காலங்களில் மன நல தேவைகள் என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மனநலத்துறை பேராசிரியர் டாக்டர். ராமானுஜம் வரவேற்றார்.
பேரிடர் காலங்களில் செயல்படும் விதங்கள் குறித்து மனநலத்துறை தலைவர் டாக்டர். ரமேஷ் பூபதி விரிவாக பேசினார். இந்த தருணத்தில் மக்களின் அச்சம், மனசிதைவு, மனநல பாதிப்பு போன்றவற்றில் இருந்து மீட்க முதலுதவி அளிப்பது குறித்து அவர் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சி முடிவில், போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர், பராமெடிக்கல் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனநலத்துறை உதவி பேராசிரியர் டாக்டர். சுவாதிலட்சுமி செய்திருந்தார்.













