திருநெல்வேலியில் பரபரப்பு : மாநகராட்சியை கண்டித்து தியாகராஜ நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பாக போராட்டம்!

protest-by-the-thyagaraja-nagar-residential-welfare-association-against-tirunelveli-corporation

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை 55வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டம், தார்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழை காலத்துக்கு முன்னரே குளங்களை தூர் வாற வேண்டும்.

இப்படி, பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தியாகராஜ நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பாக சில மாதங்களுக்கு நெல்லை மாநகராட்சி கமிஷனரை கவுன்சிலர் முத்துசுப்ரமணியம் தலைமையில் மனு அளித்தனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, இன்று (அக் 13) அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தியாகராஜ நகர் பஜார் பகுதியில் நடந்த போராட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மகராட்சியின் மெத்தனத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

READ MORE ABOUT :