கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தாய்மார்களின் வசதிக்காக குழந்தைகள் காப்பகம்

childcare-facility-for-the-convenience-of-mothers-at-gangaikondan-sipcot-complex

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் குழந்தைகளை பராமரிக்க புதிதாகக் கட்டப்பட்ட குழந்தைகள் காப்பகத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றநிகழ்ச்சியில், சிப்காட் திட்ட இயக்குநர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அவர், காப்பகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களை அன்புடன் வரவேற்ற

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் நோக்கில் இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. சிப்காட் திட்ட அலுவலக வளாகத்தில், சுமார் 605 சதுர அடி பரப்பளவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.

இங்கு, நல்ல பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் குழந்தைகளுக்கு அன்பாக, பொறுமையான முறையில் கல்வி கற்பிப்பார். குழந்தைகளின் உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை நன்கு பராமரிக்கப்படுவார்கள். விளையாட்டுகள் மூலம் கல்வி கற்கும் சூழலும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில், சிப்காட் அலுவலர் திரு. அழகுவேல்முருகன், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிப்காட் நிறுவனப் பணியாளர்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த புதிய வசதி, சிப்காட் ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

READ MORE ABOUT :