கன்னியாகுகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'Xpressions Unisex Hair Style World' நிறுவனம் தனது மூன்றாவது கிளையை பாளையங்கோட்டை மஹாராஜா நகரில் 4வது மெயின் ரோட்டில் அமைத்துள்ளது. இந்த சலூன் நேற்று (அக் 12) திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பி.என்.ஐ டி.என்.டி. (BNI TNT) அமைப்பின் நிர்வாக இயக்குநர் மொஹமத் ரியாஸ் மற்றும் பிரபல திரைப்பட நடிகர் தாடி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி சலூனைத் திறந்து வைத்தனர்.
இது குறித்து சலூனின் நிர்வாகி கூறுகையில், " திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் தனித்துவமான ஒப்பனை அனுபவம் மற்றும் மேம்பட்ட சிகையலங்கார சேவைகளை வழங்குவதே 'Xpressions'-ன் நோக்கம் . திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல முறையில் சேவை வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து விதமான சிகை அலங்காரமும் இங்கு செய்யப்படும். ஒரே இடத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவையான முடி வெட்டுதல் , ஹேர் வாஷ் / ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங் , ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் / ஸ்மூத்தனிங், ஹேர் ட்ரீட்மெண்ட், ஹேர் ஸ்டைலிங் , ஃபேஷியல் கிளீன்அப் ,பிளீச் , ஸ்கின் பாலிஷிங் / ஸ்க்ரப்பிங், பிம்பிள் மற்றும் டார்க் ஸ்பாட் ட்ரீட்மெண்ட், க்ளோ பேஸ் ட்ரீட்மெண்ட் போன்ற அழகு, பராமரிப்பு, மற்றும் ரிலாக்ஸேஷன் ஆகிய மூன்றையும் வழங்குகிறோம். "
இவ்வாறு அவர் கூறினார்.











