தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி ,நெல்லை ,தென்காசி, கன்னியாகுமரி ,விருதுநகர் ,மதுரை ,இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ,கோயம்புத்தூர், ஈரோடு ,திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நெல்லை, தென்காசி ,கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை வழங்கப்படுகிறது.











