கறிக்குழம்பு பிரச்னை: கங்கைகொண்டானில் குழந்தைகளுடன் தாய் தற்கொலையில் அதிர்ச்சி தகவல்

திருநெல்வேலி அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள பருத்தி குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 27). இந்த தம்பதியருக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.

கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இரு நாட்களுக்கு முன்பு, முத்தையா கறி எடுத்து மனைவியிடம் கொடுத்து சமைத்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால், முத்துலட்சுமி சமைத்து தர மறுத்துள்ளார். இதனால், தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, மனைவி குழந்தைகளை பருத்திகுளத்திலுள்ள மாமியார் வீட்டுக்கு முத்தையா அனுப்பியதாக தெரிகிறது. அதோடு, மாமியார் வீட்டுக்கும் சென்று முத்தையா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன், காரணமாக ,, மனமுடைந்த நிலையில் இருந்த முத்து லட்சுமி நேற்று (அக் 13)காலை காலைகடன் கழித்து விட்டு வருவதாக தாயாரிடத்தில் கூறியுள்ளார்.பின்னர், குழந்தைகளுடன் சென்று அங்கிருந்த கிணற்றில் குழைந்தைகளுடன் விழுந்து உயிரை மாய்த்துள்ளார்.

இது தொடர்பாக, கணவர் முத்தையாவிடம் கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

READ MORE ABOUT :