ஒரே நாள் மழை பல் இழிக்கும் நெல்லை : மேயருக்கு தாங்க முடியாத தொல்லை!

one-day-rain-water-stagnation-in-nellai-city

ஒரு நாள் மழைக்கு தாங்காத நெல்லை நகரில், பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் , சாலையில் தேங்கிய மழை நீரில் அமர்ந்து மீன் பிடித்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியது . சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். 25 வது வார்டுக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலையில் தண்ணீர் பெருமளவு தேங்கியது .

அப்படி, தேங்கிய வெள்ளத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கரபாண்டியன் தனது தொண்டர்களுடன் நாற்காலி போட்டு அமர்ந்தார். பின்னர், வெள்ளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பு போராட்டம் நடத்தினர்.

'ஒரு நாள் மழைக்கே நெல்லையில் பல இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. சாலைகள் முறையாக அமைக்காததாலயே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது 'என்று போராட்டத்தில் ஈடுபட்ட சங்கர பாண்டியன் ஆதங்கமாக கூறினார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே இப்படி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ தலைவர் சங்கர பாண்டியனின் மனைவி அனுராதா 25வது வார்டின் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :