திசையன்விளை லிட்டில் கிராண்ட் மாஸ்டராக மாணவன் மகிலேஷ் தேர்வு

student-mahilesh-selected-as-little-grand-master-of-tisaiyanvilai

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு , ரோட்டரி கிளப் திசையன்விளை எலைட் சார்பாக திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் மண்டபத்தில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது,

இந்த போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கோல்டு ஸ்டார் பள்ளி மாணவன் அஷ்ஃபாக் முதல் பரிசு பெற்றார். 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் டேனியல் தாமஸ் பள்ளி மாணவன் மகிலேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இவர், திசையன்விளை லிட்டில் கிராண்ட் மாஸ்டராகவும் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி முன்னாள் செயலாளர் தங்கையா ரமேஷ் பிரபு தங்ககாசு வழங்கி பாராட்டினார்.

14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் டேனியல் தாமஸ் மாணவன் ஜாண் நிஷான் , 18வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஜெடால்ஃப் ஜோசப் இரண்டாம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு பொருளாளர் சகாதேவன் மற்றும் ரோட்டேரியன் செந்தில் வெள்ளி காசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் சி .ஜெ .ரமேஷ் குமார் , செயலாளர் ராம் டெண்டுல்கர் , பொருளாளர் சகாதேவன் , பட்டைய தலைவர் சாந்தகுமார் , மண்டலம் 24 -துணை ஆளுநர் செல்லப்பா , சர்வதேச சதுரங்கப் போட்டியின் நடுவர் மற்றும் பயிற்சியாளர் செல்வ மணிகண்டன் , ரோட்டரி முன்னாள் தலைவர்கள் பாலகிருஷ்ணன் , அஜீஸ் , சிவகுரு , துணை தலைவர் பெருமாள் ராஜ், சங்க உறுப்பினர்கள் மணிகண்டன் , செந்தில் , கார்த்திக் , தங்கையா ஆகாஷ் முருகேசன் , ஜாண் , பிரின்ஸ் , ஜெம்ஸ் வசந்த் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , பொது மக்கள் கலந்து கொண்டனர்.