ராதாபுரம்‌ அருகே கிணற்றில் விழுந்த இளைஞர்: 30 மணி நேரமாக கம்பியை பிடித்துக் கொண்டு தவிப்பு

youth-falls-into-well-near-radhapuram-near-nellai

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் , மனநலம் பாதிக்கப்பட்ட 26 வயது ஐயப்பன் என்ற இளைஞன், நேற்று காலை எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாத பகுதி இது. இதனால் , அந்த இளைஞர் கூச்சல் போட்டும் பலனில்லை. கிணற்றிற்குள் இருந்த கம்பி ஒன்றை பிடித்துக் கொண்டு சுமார் 30 மணி நேரம் உயிருக்காக போராடியுள்ளார்.

இன்று( அக்.16) மதியம் அந்த வழியாக சென்ற ஒருவர் கிணற்றுக்குள் இருந்து கேட்ட சத்தத்தையடுத்து உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது, ஐயப்பன் கிணற்றுக்குள் கம்பி ஒன்றைப் பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தார். தகவலின் பெயரில் ராதாபுரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், கிணற்றுக்குள் கயிறு கட்டி ஐயப்பனை பத்திரமாக மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

READ MORE ABOUT :