நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள வன்னியன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் . இவர், வள்ளியூர் மற்றும் களக்காடு பகுதிகளில் லியா மொபைல் என்ற பெயரில் மொபைல் கடைகளை நடத்தி வருகிறார். முத்துகிருஷ்ணன் தனக்கு தெரிந்த ஒருவருக்கு கடனாக ரூ.85 ஆயிரம் கொடுத்ததாக தெரிகிறது. அந்தப் பணத்தை திரும்ப கேட் போது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடன் வாங்கிய நபர் தனது நண்பரான மதன் என்பவரிடம் கூறியுள்ளார். இதனால், மதன் முத்துகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நேற்றிரவு வன்னியன் குடியிருப்பில் முத்துகிருஷ்ணனின் வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார்.

உடனடியாக, முத்துகிருஷ்ணன் திருக்கருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும், குற்றவாளியைப் பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.










