மாநகர தந்தைக்கு தீபாவளி பரிசு: நெல்லை திமுக மேற்கு மாநகர செயலாளர் சுப்மணியன் மகிழ்ச்சி

diwaly-gift-to-nellai-meyor

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசளித்து வருகின்றனர். நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு போனசுடன் இனிப்புகள், பட்டாசுகளை அளித்து வருகின்றனர்.

வரும் , 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தனது நண்பர்கள்,உறவினர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், நெல்லை மேயர் ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் , மாநகரத்தின் முதல் குடிமகனான அவருக்கு தீபாவளி பரிசு வழங்கி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல், திமுக நிர்வாகிகளுக்கும் தீபாவளி பரிசு வழங்கினார்.

READ MORE ABOUT :