ககன்யான் திட்டம் : டிசம்பரில் விண்ணில் பாய்கிறது செம ராக்கெட்- நெல்லையில் இஸ்ரோ தலைவர் தகவல்

gaganyaan-project-important-anouncemeny-by-isro-chief-in-nellai

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் ககன்யான் திட்டத்தை நிறைவேற்றும் முதற்கட்டப் பணியாக, ஆளில்லாஎல்.வி.எம்-3 ராக்கெட் வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று, இஸ்ரோ தலைவர் நாராயணன் திருநெல்வலியில் தெரிவித்துள்ளார்.

*நெல்லை நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு*

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர், பேசியதாவது,

ஆளில்லா ராக்கெட் சோதனை*

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை நிறைவெற்ற தயாராகி வருகிறோம். முதற்கட்டமாக ஆளில்லாமல் அனுப்பப்படும் மூன்றாம் தலைமுறைக்கான எல்.வி.எம்-3' ராக்கெட் வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.உலகமே வியந்து பார்த்த சந்திரயான் திட்டங்களில் ராக்கட்டுகளை விண்ணில் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட *எல்.வி.எம்-3' ரக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது. சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்தே மனிதனை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.வரும் 2030-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவில் பல்வேறு புதிய சாதனைகளை படைக்கும்.

*ரூ. 30,000 கோடி இழப்பு தவிர்ப்பு*

இஸ்ரோவின் அதிநவீன தொலைத்தொடர்பு சாதனைகள் காரணமாகத்தான் தினமும் லட்சக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடலில் சரியான வழித்தடத்தை அறிந்து, பத்திரமாகச் சென்றுவிட்டு மீண்டும் கரைக்கு திரும்புகின்றனர். இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 30 ஆயிரம் கோடிஇழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.