தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் வடியாததால் குளம் போல் காணப்படும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் குளம் போல் காணப்படுகிறது.
தூத்துக்குடியில் கடந்த18, 19,20 ஆம் தேதி மாலை வரை மழை பெய்தது . 19 ஆம் தேதி இரவில் மட்டும் சுமார் 8 செ. மீ அளவுக்கு மழை பெய்தது . இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வடிந்தது. ஆனால், தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் அதன் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்னும் மழை நீர் வடியவில்லை . அங்கு, மழைநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது . மழை நீரை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆனால் பொதுப்பணித்துறை இதுவரை கண்டுகொள்ளவில்லை.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு , மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவே மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீங்களே மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்றுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . மழை நீர் அசுத்த நீராக மாறி பாசி படர்ந்து துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.








