திசையன்விளை சண்முக நாத சாயிபாபா கோவில் வருஷாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் பாபா தரிசனம்

Annual-consecration-ceremony-of-the-Shanmuga-Nath-Sai-Baba-Temple-in-Thisayanvilai

திசையன்விளை.அக்.27

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வ மருதூர் பைபாஸ் ரோட்டில் அடைக்கலம் காத்த விநாயகர் கோயில் அருகில் அமைந்துள்ள சண்முகநாத சாயிபாபா கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சாயிபாபா கோவில் களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவிலின் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. காலையில் மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, 108 சங்கு பூஜை ,கணபதி ஹோமம், மகாவிஷ்ணு ஹோமம், மற்றும் பரிவார ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் சண்முகநாத சாயிபாபா விற்கு 108 சங்கு அபிஷேகம் ,விமான கலசத்திற்கு மற்றும் மகா கணபதி, சுப்ரமணிய சுவாமி ,மற்றும் தத்தாத்ரேயர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மதியம் சிறப்பு மத்யாகன ஆரத்தி நடைபெற்றது. அதிசய நிகழ்ச்சி யாக ஆரத்தி நிகழ்ச்சி முடிவில் சாய்பாபா சிலையின் மார்பு பகுதியில் இருந்து உதி என்று அழைக்கப்படும் விபூதி கொட்டியது. அதை பக்தி பரவசத்துடன் புண்ணிய பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடந்தது. வருஷாபிசேக விழா நிகழ்ச்சி யில் திசையன்விளை தொழில் அதிபர் சேம்பர் கே.செல்வராஜ், ஐலேண்ட் தொழில் அதிபர் அரவிந்த் கணேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு டாக்டர் அறம் வளர்த்த நாதன் -மகாலட்சுமி தம்பதியினர் தலைமை வகித்தனர். சாயிபாபா கோவில் நிர்வாகி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.எம்.இசக்கியப்பன் அனைவரையும் வரவேற்று விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.