வள்ளியூர் புறவழி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேர் கைது!

6-people-arrested-for-bike-race-on-Valliyur-bypass-road

நெல்லை மாவட்டம் வள்ளியூர் புறவழி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது 6 விலை உயர்ந்த ரேஸ் பைக்குகள் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வ தேவ், ஜெகன், வெஸ்லின், அஜய், சபரீஷ், பென்சன், ஷாமிலி ஷென் ஆகிய ஆறு இளைஞர்கள் கன்னியாகுமரி காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வள்ளியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து அந்தப் பகுதிக்கு போலீசார் ரோந்து சென்றுள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரை சென்றுவிட்டு அதன் பின்பு திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற போது வள்ளியூர் புறவழிச்சாலையில் விலை உயர்ந்த 6 பைக்குகளையும் மறித்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பைக்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்தனர்.

இதனை அடுத்து பைக் ரேஸில் ஈடுபட்ட ஈடுபட்ட வாலிபர்களின் விலை உயர்ந்த பைக்குகளான கவாசகி, டுகாட்டி, ஹார்லி டேவிட்சன், ஹோண்டா போன்ற விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்து வள்ளியூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.

தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்களின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வர வைத்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்..

இதுபோன்று பைக் ரேஸ் களில் ஈடுபடுவோர் அவ்வப்போது விபத்துகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினர் இம்மாதிரி பைக் ரேஸ்களில் ஈடுபடுவர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.