திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித்தேர் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. திருக்கோயில் அறங்காவலர்குழு, நிர்வாகம்,உபயதாரர்கள், பக்தர்கள் இதற்கான பொருட்களை வழங்கினர். தேக்குமரத்தில் தேர் உருவாக்கப்பட்டு, இரண்டு குதிரைகள், பிரம்மன் மற்றும் ஆகம விதிகளின்படி மரச்சிற்பங்களில் 450 கிலோ வெள்ளி தகடுகளால் வேயப்பட்டு18 அடி உயரத்தில் தேர் உருவாகியுள்ளது.

இந்த பணியினை சில மாதங்களுக்கு முன் நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாபிள்ளை தொடங்கி வைத்தார். வெள்ளித்தேர் செய்யும் பணியினை மதுரை கல்யாணசுந்தரம் ஸ்தபதி குழுவினர் மேற்கொண்டு வந்தனர். 450 கிலோ வெள்ளியில் தயாரிக்கப்பட்ட இந்த தேரின் வெள்ளோட்டம் வரும் 3ம் தேதி (திங்கட்கிழமை) மாலை.6.30.மணிக்குமேல்.7.30.மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கான, ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.









