முதல்வருக்கு அல்வா கொடுத்து நெல்லை மாநகராட்சிக்கு தேவையான காரியங்களை சாதித்து கொண்ட மேயர் ராமகிருஷ்ணன்.
நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் சென்னைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடந்த திமுக கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பின்னர் முதல்வரை தனியாக சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, முதல்வருக்கு நெல்லையின் பிரபல இருட்டுக்கடை அல்லாவை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். முதல்வரும் சிரித்தபடி அல்வாவை வாங்கிக் கொண்டார்.
மேலும், இந்த தருணத்தில் நெல்லை நகருக்கு தேவையான திட்டங்களை மாநகராட்சி மேயராக முதல்வருடன் விவாதித்ததாக தெரிகிறது. அப்போது, முதல்வருக்கு அல்வா கொடுத்து மேயர் காரியம் சாதித்து கொண்டாரே என அறிவாலயத்தில் இருந்த உடன்பிறப்புகள் கமெண்ட் செய்ததையும் கேட்க முடிந்தது.











