4 மாதங்களாக குப்பை அள்ளும் வண்டி ரிப்பேர் : நெல்லை 55வது வார்டு கவுன்சில் அதிர்ச்சி வீடியோ

garbage-collection-van-has-been-repaired-for-4-months-nellai-55th-ward-councilor-shocking-video

நெல்லை 55வது வார்டு கவுன்சிலர் முத்துசுப்ரமணியன் மாகநராட்சி ஆணையர் பார்வைக்காக வீடியோ ஒன்றுடன் கூடிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். ' அதில், 55வது வார்டில் ராமன் கோ நிறுவனம் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கிய குப்பை அள்ளும் வண்டி கடந்த 4 மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது. தற்போது, துப்புரவு பணியாளர்கள் மனிதகழிவுகள் முதல் குப்பைகள் வரை சாக்குபைகளில் அப்புறப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, ராமன் கோ நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . சக மனிதன் குப்பைகளை கையிலும் தோளிலும் எடுத்துச் செல்வது மனித சமுதாயத்தில் ஏற்க முடியாத ஒன்று . எனவே, தாங்கள் மட்டுமே இந்த குறைகளை நிவர்த்தி பண்ண முடியும் . இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எனது வார்டு மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.