திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் டாக்டர் மைதீன் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மகன் நசீர் (45 ) திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதி செயல்படும் இ. எஸ். ஐ மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இவர், தந்தை நடத்தி வரும் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அங்கு பணியாற்றும் பெண் ஊழியரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டாக்டர் நஸீர் தலைமறைவாகிவிட்டார்.
திண்டுக்கல்லில் கண்ணபிரான் கைது
நெல்லை தச்சநல்லூர் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான வழக்கில், தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனர் கண்ணபிரான் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. தலைமறைவாக இருந்த நிலையில் அவர் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தச்சநல்லூரில் கஞ்சா மற்றும் ஆயுத வழக்கில் ராம் சூரியா, பாலாஜி ஆகிய இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.










