ஸ்ரீ தயா பவுண்டேஷன், பி.எப்.சி பாரத சேவா நிறுவனம் சார்பில் நெல்லையில் பனை விதைகள் நடும் பணி நேற்று முதல் தொடங்கியது. மேலகுளம். அரியகுளம் குளத்து கரைகளில் பனை விதைகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டது.மேலகுளம் ஊர் பொதுமக்கள் நலச்சங்க தலைவர் பெரிய பெருமாள் இந்த பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் தர்மலிங்கம்,துணை செயலாளர் கண்ணன், வெங்கடேஷ், மகாராஜன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பி.எப்.சி பாரத சேவா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் மெர்சி ஜோஸ் ஜெசிந்தா, மாவட்ட இணை செயலாளர் சித்ரா சேகர் மற்றும் சேகர், விக்னேஷ், ஷாம் ஆகியோர் செய்திருந்தனர்.









